இந்த மொட்டை மாடியில் தினமும் உணவளிக்கும் நேரத்தில் குவியும் கிளிகள் கூட்டம்

மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும் வந்து செல்கிறது.

ஏனென்றால், இங்கு வசிக்கும் விஜயலட்சுமி சிவக்குமார் தனது மொட்டை மாடியில் தினமும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். ரேஷன் கடையில் வாங்கும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கிளிகளுக்கு உணவாக வழங்குகிறேன்” என்கிறார் விஜயலட்சுமி.

கிளிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பறக்கிறார்கள் – காலை 6 மணி மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு. மேலும் மழை பெய்தால் இந்த கிளிகள் பக்கத்தில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைகின்றன.

விஜயலட்சுமிக்கு விலங்குகள், பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது பகுதியில் பல ஆண்டுகளாக தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.

விஜயலட்சுமி பிஸியான தினசரி வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், இவர் மணிகளைப் பயன்படுத்தி கிராப்ட் வேலைகள் செய்து அந்த பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் செய்யும் பொருட்களை இங்கும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார்.

புகைப்படம் : விஜயலட்சுமி

  காணொளி

 

Verified by ExactMetrics