ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

சமீபத்தில் ஐ.எம்.ஏ நடத்திய பாராமெடிக்கல் போர்டு தேர்வுகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரியின் இரண்டு பாராமெடிக்கல் மாணவர்கள் (டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன் படிப்பில்) மாநிலத் தரவரிசைகளைப் பெற்றனர் – இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதும் தேர்வெழுதிய 750 மாணவர்களில் அவர்கள் 2வது மற்றும் 3வது இடத்தைப் பெற்றனர்.

பி.தேன்மொழி 2வது ரேங்கையும், எஸ்.திவ்யா 3வது ரேங்கையும் பெற்றனர். இந்த சமுதாயக் கல்லூரி ‘சிறந்த செயல்திறன்’ விருதையும் பெற்றது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது.

மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, நவம்பர் மாத தொடக்கத்தில் மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியை நிர்வகித்து வரும் குழுவையும் மற்றும் இரு மாணவர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சைன் பேடியும் கலந்து கொண்டார்.

இக்கல்லூரிக்கு ஐஎம்ஏ வழங்கும் ‘சிறந்த கல்வி நிறுவனம் விருது’ கிடைத்திருப்பது இது மூன்றாவது முறையாகும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப் டெக்னிசியன், சுகாதார உதவியாளர், டயாலிசிஸ் டெக்னிசியன், ரேடியோலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னிசியன், போன்ற டிப்ளோமா படிப்புகளும் மற்றும் இரண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன – ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் டேலி படிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றது.