ஆர்.ஆர் சபாவில் மார்கழி இசை விழா தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. அதே போல லஸ் அருகே உள்ள ஆர்கே சென்டரில் இசை விழா தொடங்கி கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவில் கடந்த சனிக்கிழமை இசை விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த சபாவில் சபா உறுப்பினர்களையும் மற்றும் இசை ரசிகர்களையும் கச்சேரியை காண்பதற்கு அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கின்றனர். அதே நேரத்தில் ஆர்.ஆர். சபாவில் நடைபெறும் கச்சேரிகளை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

    ஆர்.ஆர். சபா இசை விழா தொடக்கம்.
Verified by ExactMetrics