உள்ளூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் அட்வென்ட் சீசன் தொடக்கம்.

மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் அட்வென்ட் சீசன் என்று குறிப்பிடுவர்.

சில தேவாலயங்கள் சாதரணமான அலங்காரங்கள் செய்துள்ளனர். இந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமியின் சிறப்பு பூசை நடைபெற்றது. இந்த கதீட்ரலில் சிறப்பு என்னவென்றால் கிறிஸ்துமஸ் நேரத்தில் பூசை நடக்கும் மேடையின் அருகில் பாரம்பரியமாக நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு வண்ணத்தில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றுவர். கீழே உள்ள படத்தில் நீங்கள் இந்த காட்சியை காணலாம்.

 

Verified by ExactMetrics