அம்பேத்கர் நினைவுநாளையொட்டி ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் வரிசையில் நின்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை முதல் நிறைய மக்கள் வரிசையில் நின்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். புதிதாக இந்த மணிமண்டபத்துக்கு வந்திருந்த சிலர் மணிமண்டபத்தை சுற்றி பார்வையிட்டனர். மணிமண்டபத்தில் புத்தரின் சிலை ஒன்று உள்ளது. மேலும் இங்கு ஒரு நூலகமும் உள்ளது. இந்த வளாகத்தில் ஒரு மேடையில் காலையில் பறை வாசிக்கும் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. இங்கு மக்கள் நாள் முழுவதும் மரியாதை செலுத்த வருவார்கள்.

Verified by ExactMetrics