புதன்கிழமை நடைபெறவுள்ள தெப்போற்சவத்தில் மக்கள் பங்கேற்க அனுமதி

தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், புதன்கிழமை பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் மீண்டும் திறக்கப்படும்.

தெப்போற்சவத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாளான புதன்கிழமை (ஜனவரி 19) பக்தர்கள் கோயிலுக்குள் ஊர்வலத்தில் பங்கேற்பது மற்றும் குளத்தில் தெப்போற்சவத்தை குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து சாமி தரிசனம் செய்வது போன்றவற்றை அனுமதிப்பது என்று கோவிலின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

தெப்போற்சவம் இன்று ஜனவரி 17ம் தேதி மாலை தொடங்குகிறது.

செய்தி : எஸ்.பிரபு