இரண்டு நாட்களே நடைபெறவுள்ள லாசரஸ் தேவாலய வருடாந்திர தேர் திருவிழா

ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.

இந்த திருவிழாவில், தேவாலயத்தில் பூசைகள் முடிந்த பிறகு மாதா சிலை மற்றும் இதர சிலைகளுடன் தேவாலயம் சுற்றியுள்ள தெருக்களில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர் பவனி நடைபெறும்.

ஆனால் இந்த வருடம் கோவிட் நேர விதிமுறைகளின் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூசையும் அதை தொடர்ந்து தேர் பவனி தெருக்களில் சாதாரணமாக நடைபெறும். இந்த தேர் தெருக்களில் எங்கும் நிற்காமல் செல்லும். அடுத்த நாள் 20ம் தேதி ஒரு சிறப்பு பூசை நடைபெற்ற பிறகு தேர் பவனி நடைபெறும். பாதிரியார் மேற்கண்ட அட்டவணைப்படியே விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Verified by ExactMetrics