தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில் காவல்துறையினருக்கு உதவியாக சில வேலைகளை செய்வதாகும்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேரத்தில் இந்த தன்னார்வ குழுவை சேர்ந்த சுமார் 12 நபர்கள், லஸ் சிக்னல் அருகே மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகளுக்கு உதவிபுரிந்தனர். இந்த குழுவில் 60 வயது மதிக்கதக்க குமரேசனும் ஒருவர்.

இவர் லஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நேரு நியூஸ் மார்ட்டின் உரிமையாளர். இவர் சிறு வயது முதலே பேப்பர் போடும் தொழிலை செய்து பின்னர் நியூஸ் மார்ட் ஆரம்பித்து பிரபலமானவர். இவர் இந்த விஜிலென்ஸ் குழுவின் மூத்த உறுப்பினர், இந்த கொரோனா நேரத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, இ-பாஸ் இல்லாமல் வெளியில் செல்லாமலிருப்பது போன்றவற்றை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் சுமார் நான்கு மணி நேரத்துக்கு இந்த தன்னார்வ குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இது போன்று கபாலீஸ்வரர் கோவிலில் திருவிழா காலங்களில் இந்த தன்னார்வ அமைப்பு போலீசாருக்கு உதவிபுரியும். நீங்களும் இதுபோன்ற குழுவினருடன் இணைந்து பணியாற்றலாம்.

Verified by ExactMetrics