போலியும், புல்காவும் விற்கும் இந்த கடை தொடங்கப்பட்ட சில மாதங்களிலிலேயே மக்களிடையே பிரபலம்.

மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இந்த கடையை சுப்ரமணியம் நடத்தி வருகிறார். இவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடை மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்குகிறது. மாலை ஸ்னாக்ஸ், முறுக்கு, ஸ்வீட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4.30 மணியளவில் போலியும், சுமார் 7.30 மணியளவில் புல்கா விற்பனை செய்யப்படுகிறது. 4துண்டுகள் புல்கா மற்றும் சைடிஷ் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடிய விரைவில் காலை டிபனும் மதியம் சாப்பாடும் வழங்கவுள்ளதாக சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9790770777

Verified by ExactMetrics