அபிராமபுரத்தில் உள்ள மாதா பேராலயத்தில் எளிமையாக நடைபெற்ற வருடாந்திர திருவிழா

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் வருடாந்திர மாதா திருவிழா கடந்த திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.

இந்த திருவிழா வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும். கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த வருடம் திருவிழா நடத்தப்படவில்லை. எனவே இந்த வருடம் மே மாதம் நடத்த வேண்டிய திருவிழாவை தற்போது எளிமையாக நடத்தியுள்ளனர்.