அந்தமான் பிஷப்புக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய சமூகத்தினரால் விழா

லாசரஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் செப்டம்பர் 16ம் தேதி ஒரு விழா நடைபெற்றது, சமீபத்தில் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வான விசுவாசம் செல்வராஜ் பூசை நடத்தினார். மேலும் அவருக்கு ஒரு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

ஆர்.ஏ.புரம் ஆந்திர மகிள சபா அருகே வசித்து வந்த செல்வராஜ் சாந்தோம் பள்ளியில் பயின்றவர் என்பது குறிபிடத்தக்கது. மேலும் இவர் சாந்தோம் பேராலயத்தில் பயிற்சி பெற்றவர். எனவே இவர் சென்னை வந்த நேரத்தில் லாசரஸ் மாதா பேராலயத்திலும் அபிராமபுரம் பேராலயத்திலும் மக்களால் விழா நடத்தப்பட்டது.

Verified by ExactMetrics