அப்பு தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் படுகொலை

சாந்தோம் அப்பு தெரு சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலையானவர் மந்தைவெளி பகுதியில் வசிப்பவர் என்றும் இவர் ஆவின் பார்லர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்றும் மயிலாப்பூர் போலீசார் தெரிவிக்கின்றனர். இரு பிரிவினரிடையே இருந்த மோதல் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாகவும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.