சாந்தோம் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைகளை மக்கள் யூடியூபில் காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக சமூக வலைதள பக்க்தத்தில் செய்தி வந்துள்ளது.

இது பற்றி நாம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைக்கு சென்று வரும் ஒருவரை கேட்டபோது, வயதானவர்கள் சிலர் பூசையை காண்பதற்கு பேராலயத்திற்கு வந்ததால் அவர்களை பூசையை காண அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.

சாந்தோம் பேராலயத்தின் மூத்த அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது என்றும் பூசை நடைபெறும் போது யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மூன்று முக்கிய பூசைகளை சாந்தோம் டிவி என்ற யூடியூபில் ஒளிபரப்படுகிறது என்றும், அதன் வழியாக மக்கள் பூசைகளை காணலாம் என்று தெரிவிக்கிறார்.