ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி தேவை. பொதுமக்களிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது.

இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள ஐந்து பள்ளிகளை சேர்ந்த சுமார் இருபத்தைந்து மாணவர்கள் நிதி உதவிக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். இந்த திட்டத்திற்கு சுமார் இரண்டரை லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிதி உதவிக்கு மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் குறிப்பிட்ட அளவிலும் மீதமுள்ள தொகையை பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிஉதவி அளிக்கவிருப்பமுள்ள பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம்.

Verified by ExactMetrics