மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு ஆர்.ஏ.புரத்திலுள்ள இந்த காலனி அழகாக காட்சியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்திலுள்ள ஆர்.கே நகரில் வசிக்கும் மக்கள் மரம் நடுதல், தெருவோர சாலைகளில் உள்ள சுவர்களை பெயிண்ட் அடித்து தூய்மையாக வைத்திருப்பது போன்ற சமூக பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு சிறிய குழு தெருவில் வந்து தேவையான இடங்களில் மரம் நடும் வேலைகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்த குழுவினர் பழைய படகை எடுத்துவந்து தெருவின் ஒரு பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அந்த படகில் செடிகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics