பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சரியாக குத்தகை வழங்கப்படாத காரணத்தால், இந்த இடத்தை அறநிலையத்துறை எடுத்து சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டு மைதானத்தை நடைப்பயிற்சி செய்ய ஏற்றவகையிலும் மற்றும் இன்னும் பிற விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் மேம்படுத்த உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.

Verified by ExactMetrics