தேர்தல் 2021: போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இராணி மேரி கல்லூரி.

இன்று முதல் இராணி கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இங்கு வட சென்னையில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஏவிஎம் இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் மூன்று நுழைவாயில்களிலும் சிஆர்பிஎப் படை வீரர்களும் மற்றும் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ம் தேதி வரை கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கல்லூரிக்கு செல்லும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும் பலகட்ட சோதனைக்கு பிறகே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Verified by ExactMetrics