கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாக காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நமது பகுதியில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள RAPRA என்ற தொண்டு நிறுவனம் நீண்ட நாட்களாக தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து மாடித்தோட்டம் மற்றும் காய்கறித்தோட்டம் சம்பந்தமாக நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளனர். சமீபத்தில் தோட்டக்கலை துறை காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய தொடங்கியவுடன் மற்றொரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தோட்டக்கலை துறையின் காய்கறி வாகனங்கள் இங்குள்ள பூங்கா அருகே நிறுத்தப்பட்டு காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தனர் அவ்வாறு விற்பனை செய்த பழங்கள் காய்கறிகள் அனைத்தும் புதியதாகவும் தரமானதாகவும் மற்றும் நியாயமான விலையிலும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.அனைவரும் மகிழ்ச்சியோடு வந்து வாங்கி செல்கின்றனர். இதற்கு பின் பங்கனப்பள்ளி போன்ற சுவை மிக்க மாம்பழங்களையும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்தார்கள். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாகவும், மேலும் வார சந்தை போல தொடர்ந்து நடத்த RAPARA வின் Dr சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன் விளைவாக தோட்டக்கலை துறை கோரிக்கையை பரிசீலனை செய்து வருகின்றனர். உங்கள் பகுதியில் இது போன்று வார சந்தை நடத்த விரும்பினால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள (RAPARA) அஸோசியேசன் நிறுவனர் Dr சந்திரசேகரனை 9841030040 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…