ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் நேற்று காலை முதல் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பத்திரிகையாளர்களும் திரண்டிருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அறுவைசிகிச்சை முடிந்து ரஜினியின் உடல்நிலை நல்ல முறையில் உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





