ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பழங்குடியினருக்கு குடிசைகளை கட்டியுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லம், 40 இருளர் பழங்குடியினக் குடும்பங்களுக்கு (மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக) குடிசைகளையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் (உத்திரமேரூர் அருகே) மதுராந்தகம் தாலுகா, எண்டத்தூர் தொகுதி, ஆலப்பாக்கம் கிராமத்தில் சஹோதரி நிவேதிதை சமுதாயக் கூடத்தையும் ரூ.24 லட்ச ரூபாய் செலவில் கட்டியுள்ளது.

ராமகிருஷ்ண மடம் & ராமகிருஷ்ணா மிஷன், பேலூர் மடத்தின் உதவிப் பொதுச் செயலாளர் சுவாமி போதசரானந்தாஜி மகராஜ் பிப்ரவரி 17 அன்று ஆலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடிசைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலாளர் சுவாமி சத்யஞானந்தா, ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகள், உள்ளூர் பஞ்சாயத்து தலைவர், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Verified by ExactMetrics