கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சில மாறுதல்களை செய்துள்ளது.
இதற்குமுன் நடைபெற்ற பிரதோஷ விழா முடிந்த பிறகு பக்தர்கள் சந்நிதிகளைப் பார்க்க விரும்புவோர் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது அவர்கள் சந்நிதிகளுக்கு அருகில் சென்று சாமி தரிசனம் செய்ய எவ்வித தடைகளும் இல்லை. அதேபோல் சுதந்திரமாக பிரகாரங்களைச் சுற்றி நடக்க முடியும். மேலும் கோவிலில் அமர்ந்து தங்களது பிராத்தனைகளை செய்யலாம்.
கபாலீஸ்வரர் கோவிலில் முக்கிய விழா நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவருகிறது.