கச்சேரி சாலையில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல தடை.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் தினமும் வழக்கமாக நடைபெறும் தொழுகை அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அறிவிப்பு பலகை மசூதி வாசலில் வக்பு வாரியத்தின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் ரம்ஜான் நோன்பு தொழுகை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சூழ்நிலையில் நோன்பு கஞ்சி வீட்டில் தயார் செய்ய முடியாதவர்களுக்கு மசூதி அருகே தனியார் மூலமாக நோன்பு கஞ்சி விற்கப்படுகிறது.

Verified by ExactMetrics