ஆழ்வார்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும் கீர்த்திலால் நகை கடை சந்திப்பு அருகில் உள்ள பீமண்ண கார்டன் தெருவில் உள்ளது. இனிமேல் தினமும் தடுப்பூசி இங்கு போடப்படும். இன்று காலை சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்த இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வந்த சிலரை இந்த மையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போட்டனர். இங்கு தன்னார்வலர்களும் சிலர் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த புதிய தடுப்பூசி போடும் மையம் ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics