நாரத கான சபாவில் ‘சல்யூட் மதர்ஸ்’ அன்னையர் தின விழா

ஒவ்வொரு ஆண்டும், அதன் அன்னையர் தின நிகழ்வில், பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த தாய்மார்களை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கவுரவிக்கிறது.

சல்யூட் மதர்ஸ் என்றழைக்கப்படும் 2024 நிகழ்வு இன்று மாலை (மார்ச் 6), ஆழ்வார்பேட்டை நாரத கான சபையில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இசைக்கவி ரமணனின் தாயார் ஏ சாவித்திரி, சோஹோ நிறுவனர் ஜானகி வேம்பு, ஏஜிஎஸ் சினிமாஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தியின் தாயார் ஆண்டாள் அகோரம் ஆகியோர் கவுரவிக்கப்படவுள்ளனர்.

மேடையில் விருந்தினர்களாக எழுத்தாளர் சிவசங்கரி, கலை ஊக்குவிப்பாளர் நல்லி குப்புசாமி மற்றும் ஹோட்டல் சங்கத் தலைவர் ராமதாச ராவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics