ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் நேற்று காலை இங்கு வந்து, வெள்ளத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். லின் பெரேரா தெரு மற்றும் முத்துகிருஷ்ணன் தெரு, டூமிங் குப்பம் தெரு மற்றும் மாதா சர்ச் தெருவில் வசிக்கும் சாந்தோம்வாசிகள் இந்த சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்று வெள்ளம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் இங்கு வந்து வெள்ளதை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்களே தவிர ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னும் எந்தவொரு நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. இது மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.