திருவேங்கடம் சாலையில் வெள்ள நீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியதால் மக்கள் அவதி

திருவேங்கடம் தெரு ஆர்.ஏ. புரத்தில் உள்ளது. இங்கு வெங்கடகிருஷ்ணா தெருவில் இருந்து ஸ்கூல் வியூவ் சாலை வரை உள்ள பகுதி கொஞ்சம் நீளமான தெரு. இங்கு மழை பெய்யும் போது வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்பது வழக்கம். ஆனால் இப்போது இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து கலந்து இருப்பதாகவும் அதே சமயம் சிலரது வீட்டு சுற்றுசுவருக்கு உள்ளேயும் புகுந்து விட்டதாக இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிகமாக மட்டுமே சரிசெய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று இங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.