பள்ளிகள் புதிய கல்வியாண்டில் மீண்டும் திறப்பு

புதிய கல்வியாண்டுக்காக சில பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, சில பள்ளிகள் காலதாமதமாகத் திறக்க திட்டமிட்டுள்ளன.

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் பள்ளி இன்று காலை திறக்கப்பட்டு 1 முதல் 9 வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. எல்கேஜி வகுப்புகள் ஜூன் 9ஆம் தேதியும், ப்ரீகேஜி வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதியும் திறக்கப்படும்.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 3 ஆம் தேதி இங்கு தொடங்கப்பட்டது.

வித்யா மந்திர் பள்ளி ஜூன் 9 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஊழியர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

புகைப்படம்: கண்ணன் தங்கராஜ்

Verified by ExactMetrics