செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து அதில் வெற்றியும் அடைந்தனர். இதன் பயனாக இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்து அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்கி மீன் வளர்ப்பு செய்தனர். ஆனால் காலப்போக்கில் தண்ணீர் தூய்மை பாதிக்கப்பட்டும் குப்பைக்கூளங்கள் அகற்றாமலும் இந்த இடம் பயன்படுத்தப்படாமல் போனது.

எனவே அடையாறு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டை ஆண்டு முழுவதும் அகற்றி, இங்குள்ள உப்பங்கழியில் மீன்கள் மற்றும் நண்டுகள் நன்றாக இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அடையாறு கழிமுக மண்டலத்தில் உள்ள உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விரும்புகின்றனர்.

CIBA (Central Institute of Brackishwater Aquacultrure) விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்த உப்பங்கழி மண்டலத்தில் மாசுபாடுகள் இருந்தாலும், கடல்நீரின் நிலையான ஓட்டம் மீன்களின் இனப்பெருக்கத்தை அனுமதிக்கிறது, எனவே PWD மணல் திட்டை அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago