சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி ஆர்.கே.சுவாமி நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் – ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு 32 பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதிப்போட்டியின் சிறப்பு விருந்தினராக பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இந்த விளையாட்டில் சிறந்து விளங்கிய சாம்பியன் பட்டய கணக்காளர் ஆர்.சுந்தர் கலந்து கொண்டார்.

பள்ளிகளுக்கு இடையேயான இந்நிகழ்ச்சியை பள்ளிச் செயலர் வி.எஸ்.சுப்பிரமணியன் துவக்கிவைக்க, உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரகாஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் – இது குறுகிய காலத்தில் நடைபெற்றதாக பள்ளியின் முதல்வர் ஜி.பாண்டியன் தெரிவித்தார்.

Verified by ExactMetrics