குறைந்த விலையில் சுவையான உணவுகள் வேண்டுமா? இந்த கடைக்கு செல்லுங்கள்.

மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது இட்லி குமார் கடை, இக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார், இக்கடை என்னமோ பார்க்க சிறியதாக தான் இருக்கும் ஆனால் அங்கு இருக்கும் உணவின் சுவையானது பெருமளவு ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

இரண்டு வருடமாக மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் இக்கடை இயங்கி வருகிறது. காலையில் இட்லி(₹10),பொங்கல்(₹40), தோசை(₹30), இடியாப்பம்(₹10), பூரி(₹10)இவைகளுக்கு ஏற்றாற்போல் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவை சுவைக்கு ஏற்றவாறு உள்ளது. மதியத்திற்கு தக்காளி சாதம்(₹40), தயிர் சாதம்(₹40), லெமன் சாதம்₹(40), பிரிஞ்சி சாதம்(₹50) போன்ற கலவை சாதங்களும் விற்கப்படுகிறது. இரவுக்கும் இதே போல் இட்லி, தோசை, சப்பாத்தி(₹10), பரோட்டா(₹10), இடியாப்பம் போன்ற சைவ உணவுகள் கிடைக்கிறது.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics