மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்காக நடத்தப்படுகிறது.

கற்பகாம்பாள் மயிலாக வடிவெடுத்து சிவபெருமானை தரிசித்ததால் இத்தலத்திற்கு திருமயிலை என்று பெயரிடப்பட்டது.

தைப்பூச தெப்பத் திருவிழாவானது வரும் ஜனவரி 25 வியாழக்கிழமை மாலை தொடங்க உள்ளது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இத்தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் முதல் நாளில் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் இணைந்து தெப்பத்தில் வலம் வருவார்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் முருகன் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் வலம் வருவார். குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் கூட நிலத்தெப்பம் என்று ஒன்று நடந்திருக்கிறது, இத்திருக்கோயில் என்று உருவானதோ அன்றிலிருந்து தெப்பமானது நடைபெற்று வருகிறது.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics