ஆழ்வார்பேட்டையில் தனியார் கடையின் காலாவதியான பொருட்களை போட்டி போட்டு எடுத்து சென்ற மக்கள்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது.

தற்போது அக்கடையை அதே கட்டிடத்தில் இயங்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து 8 மாதங்களாக மூடி இருந்த அந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கடையை காலி செய்ய அங்கு இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் வகையில் கடைக்குள் இருக்கும் பொருட்களை மூட்டை கட்டி வெளியே வைக்கும் பணியை கடையின் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

ஆனால் பொதுமக்களில் சிலர் கடை ஊழியர்களின் எச்சரிக்கையையும் மீறி காலாவதியான பொருட்களை எடுத்துச்சென்றனர்.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics