கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் பூசாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது.

பங்குனி திருவிழா தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் வருகிறது. திருவிழாவின் வீடியோக்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் மக்கள் நிறைய பேர் முகக்கவசங்கள் அணியவில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் கோவிலில் வேலை செய்யும் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கோவிலின் சார்பாக, கோவிலின் லோகோவுடன் சிறப்பு முகக்கவசங்கள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகக்கவசங்களை கோவில் ஊழியர்கள் அணிந்து வருகின்றனர்.

Verified by ExactMetrics