கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பூசைகள்

சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டு சிறப்பு பூசைகள் நடைபெறவுள்ளது.

இரவு 9.30 மணிக்கு ஆங்கிலத்திலும் 11.30 மணிக்கு தமிழிலும் சிறப்பு பூசைகள் நடைபெறும்.

இரண்டு பூசைகளும் பேராலயத்தில் திறந்த வெளியில் நடைபெறும். கிறிஸ்துமஸ் கரோல்ஸ் பாடிய பிறகே பூசைகள் தொடங்கும்.