இரண்டு சபா கேண்டீன்களில் தினசரி இலை சப்பாட்டுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு.

மார்கழி இசை விழா நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சில சபாக்களில் மட்டுமே கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. நமது மயிலாப்பூர் பகுதியில் இரண்டு சபாக்களில் கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியம் சாலையில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் சாஸ்தா கேட்டரிங் கேண்டீன் திறந்துள்ளனர். இங்கு தினமும் 12 மணிமுதல் இலை சாப்பாடு கிடைக்கிறது. இவர்களுடைய உணவுக்கு இசை ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.

வார நாட்களில் கூட இங்கு சாப்பிட வரும் மக்கள் கூட்டம் அதிகம். இலை சாப்பாட்டின் விலை ரூ.400. மேலும் இவர்கள் வருடா வருடம் ஜனவரி மாதம் மற்றும் இரண்டாம் தேதிகளில் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் முப்பது வகையான உணவுவகைகளை, புது வருட ஸ்பெஷல்லாக கொடுக்கின்றனர். இது சுமார் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. இங்கு கேண்டீன் காலை முதல் இரவு வரை செயல்படுகிறது. காலை சிற்றுண்டி, டிபன், ஸ்வீட்ஸ் போன்றவை கிடைக்கிறது.

இதே போன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள நாரதகான சபாவின் பின்புறத்தில் சாஸ்தாலயா கேட்டரிங், கேண்டீன் திறந்துள்ளனர், ரமேஷ் கிருஷ்ணன் இந்த கேட்டரிங் சர்வீஸை நடத்திவருகிறார். இங்கும் இலை சாப்பாடு வழங்கப்படுகிறது. விலை ரூ.350. ஜனவரி 5ம் தேதி வரை கேண்டீன் இயங்கும்.

சாஸ்தாலயா கேட்டரிங் / நாரதகான சபா
Verified by ExactMetrics