கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் அமைக்கப்பட்டு வரும் குடில்கள்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாசரஸ் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் உள்ள அரங்கில் குடில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் முதல்நாள் அன்று இரவு நடைபெறும் பூசைக்கு பிறகு இந்த குடில்களை மக்கள் பார்வையிடும் வகையில் திறந்து வைப்பர். இதே போன்று சாந்தோம் தேவாலயத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு வரும் குடிலையும் மக்கள் பார்வையிடலாம்.

ஜனவரி 3ம் தேதி வரை தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களை மக்கள் பார்வையிடலாம்.

Verified by ExactMetrics