தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் (இ பிளாக்) நடைபெற உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 டோஸ் கோவாக்சின் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் வழங்கப்பட உள்ளது. முகாம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அனைவரும் வரலாம். முகாம் நடைபெறும் இடத்திலேயே தடுப்பூசி போட பதிவு செய்யப்படுகிறது.