மயிலாப்பூரில் சேதமடைந்த மின் மயானத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

கடந்த ஆறு ஏழு வாரங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த மயிலாப்பூர் மின் மயானத்தில் இப்போது புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதை திங்கட்கிழமை மயிலாப்பூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

இந்த புதிய மின் மயானத்தில் இறந்த உடல்களை எரிக்க எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த ஈஷா நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த மின் மயானத்தை நிர்வகித்து வருகிறது.

நீங்கள் இறந்த உடல்களை எரிக்க ஒருங்கிணைப்பாளர் வேலுவை 9840595019 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Verified by ExactMetrics