ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் திறப்பு

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடை வீதிகளிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதை காண முடிந்தது. மொபைல் ரிப்பேர் சரிசெய்யும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்கள் விற்கும் கடைகள், மளிகை கடைகள், அரிசி விற்பனை செய்யும் கடைகள், சமையல் எண்ணெய் விற்கும் கடைகள் போன்ற கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கடைகளில் பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரத்தில் உணவு மற்றும் தின்பண்ட பிரியர்கள் பேக்கரி மற்றும் மற்ற இனிப்புவகைகள் விற்கும் கடைகளில் வரிசையில் நின்று தேவையானவற்றை வாங்கி சென்றனர்.

 

Verified by ExactMetrics