சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். அடுத்து எப்போது தடுப்பூசி வரும் என்று கிளினிக்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரியவில்லை. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.