மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் காலமானார்.

மெட்ராஸ் மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 61. பாதிரியார் இறந்ததற்கான பூசை சாந்தோம் சர்ச் அருகே ஒரு ஹாலில் நடைபெறும் என்றும், பின்னர் அவருடைய உடல் லஸ் தேவாலயம் அருகே பாதியார்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.