ஆர்.ஏ புரத்தில் ஸ்ரீ கணேஷ் பவன் புதிய உணவகம் திறப்பு

ஆர்.ஏ புரத்தில் 3 வது குறுக்குத் தெருவில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் பவன் உணவகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அதன் பத்தாவது கிளையாகும்.

இந்த உணவகத்தின் ஆப்பமும், டீ மற்றும் காபி வகைகள் மிகவும் பிரபலம். உணவகம் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை இயங்குகிறது.

காலையில் இட்லி தோசை மற்றும் பொங்கல் கிடைக்கிறது. மதியம் மீல்ஸ் வகைகளும் இரவு சப்பாத்தி மற்றும் ரொட்டிவகைகள் ஆப்பமும் கிடைக்கிறது. பார்சல் சேவையும் உண்டு. டோர் டெலிவெரியும் உண்டு.

தொலைபேசி எண்கள் – 044 47409568 / 7200431441