கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பாரம்பரிய இடங்களில் மறு வளர்ச்சி திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த முடிவு.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டதை பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், அரசு இது போன்ற பழமையான கட்டிடங்களையும் புராதன சின்னங்களையும் இடிப்பதற்கு முன் பல தரப்பட்ட மக்களின் ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்றும், திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே தற்போது இது சம்பந்தமாக மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.