மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடும் சேவை அறிமுகம்.

சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதெற்கென தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வயதானவர்கள் யாராவது இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களை தெரிவித்தால் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். இந்த சேவை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.
தடுப்பூசி போட தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 25384520 / 46122300.

Verified by ExactMetrics