சென்னை மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலவச WIFI சேவையை தொடங்கியுள்ளது. மெரினா கடற்கரை காந்திசிலை மற்றும் கலங்கரை விளக்கம் அருகில் இப்போது WIFI கம்பம் நிறுவப்பட்டு குறிப்பிட்டளவு இன்டர்நெட்டை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று மெரினாவில் மேலும் சில இடங்களில் WIFI கம்பம் நிறுவப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.