மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த காய்கறி கழிவுகளிலிருந்து சென்னை மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கின்றது. இந்த உரம் தயாரிக்க நான்கு வாரம் முதல் சுமார் பன்னிரெண்டு வார காலங்கள் ஆகும்.

இது போன்ற இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு யூனிட் கச்சேரி சாலை பக்கிங் கெனால் அருகே பறக்கும் ரயில் தடத்தின் அடியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு எருவும் மண்ணும் கலந்து தக்காளி, வெண்டைக்காய். கீரை போன்றவற்றை வளர்த்து வந்தனர். பின்னர் கொரோனா காரணமாக இது கைவிடப்பட்டது. இப்போது திரும்பவும் கார்ப்பரேஷன் ஊழிர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து காய்கறி செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் வசதி இல்லை.

இந்த செய்தியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிந்து இந்த பணியை செய்வதற்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். மாநகரட்சியின் இந்த பணி பாராட்டுதலுக்குரியது.

Verified by ExactMetrics