மெரினா கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட மீண்டும் திறப்பு

மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் திங்கட்கிழமை தவிர காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் கலங்கரை விளக்கத்திற்கு சென்று சென்னையின் அழகை கண்டு ரசிக்கலாம். இதற்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கலங்கரை விளக்கத்தின் பின்பக்கத்தில் ஒரு சிறிய அளவிலான மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் பழங்காலத்தில் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இயந்திரங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம். இது உங்களுடைய குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.