அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை வீட்டில் வளர்க்கலாம் என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்ப்பதற்கு போதிய இட வசதிகள் இல்லை, ஆனாலும் இந்த கருத்தை ஏற்ற அவரது குடும்பத்தார் ஏற்று கடைசியாக வட சென்னையிலிருந்து ஒரு கிளியை வளர்ப்பதற்காக வாங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த கிளி வீட்டில் வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. எனவே அதை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்திலிருந்து இரு கிளிகளை வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். தற்போது அந்த இரு கிளிகளும் சாரதா வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் இந்த இரு கிளிகளும் தற்போது தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வருவதாக சாரதா குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : எஸ். பிரபு

Verified by ExactMetrics