சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றிய தூய்மை பணியாளர்கள்

மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர்.

நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ரமா ராவ் காலனியில் வசிக்கும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் பகுதியில் தெரு தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களை அழைத்து கொடியேற்றி வருகின்றனர். இந்த வருடமும் அதே போன்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்துவரும் செக்யூரிட்டிகளையும் அழைத்து கொடியேற்றினர். மேலும் இதே போன்று கல்லுக்காரன் தெருவிலும் இரண்டு உர்பேசர் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து கொடியேற்றவைத்தனர். இது போன்று தங்களை யாரும் அழைத்து இதுவரை கொடியேற்றவில்லை, இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Verified by ExactMetrics