மயிலாப்பூர் பகுதியில் 75வது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது

மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்தி விழாவை கொண்டாடினர். அதே போன்று ஆர்.ஆர் சபா ஊழியர்கள் சபா வாயிலில் கொடியேற்றினர். லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதுகேளாதோருக்கான அசோசியேசன் சார்பாக சுமார் முப்பது மாணவர்கள் சேர்ந்து கொடியேற்றப்பட்டது. செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவிகளும் மற்றும் சில நர்ஸ்களும் சேர்ந்து கொடியேற்றினர் இங்கு சிறிய அளவிலான நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது.

Verified by ExactMetrics